எழுச்சியும் போராட்டமும் அடக்குமுறையும்

எழுச்சியும் போராட்டமும் அடக்குமுறையும்

காவல்துறை தடியடி நடத்தியதற்கு போராட்ட குழுவில் சமூக விரோதிகள் கலந்துவிட்டதாக விளக்கம் கூறுகிறார்கள்… அதை சரி என்றே வைத்துக்கொள்வோம்… ஆனால் எனக்கு வலுக்கும் சந்தேகங்கள் பல….

சமூக விரோதிகள் அந்த கூட்டத்தில் ஊடுருவி இருந்தால் அவர்களால் அமைதியாக இருக்கும் தருணத்தில் செயல் பட முடியுமா அல்லது கலவரமான சூழலில் செயல்பட முடியுமா?

இந்த கலவர சூழலை ஏற்படுத்திக்கொடுத்தது காவல்துறை தானே? அப்போ காவல்துறை சமூக விரோதிகளுக்கு துணை நின்றதா?

6 நாட்கள் பொறுத்திருந்த காவல்துறைக்கு இன்று ஒருநாள் அந்த சட்டம் முழு வடிவம் பெற்று வெளிவரும் வரை அவகாசம் கொடுக்க விடாமல் தடுத்து என்னவோ ??

மக்கள் அரசியல் வாதிகள் மீது நம்பிக்கை இல்லாததின் வெளிப்பாடே இப்போராட்டம்… இதுவரை கூறியது எதுவும் நிறைவேற்றப்படாமல் இருப்பது தானே இப்போராட்டதிர்க்கான முக்கிய காரணம் ….

அப்படியெனில் முதல்வர் அவசரசட்டம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்த பின்னரும் ஏன் கலையவில்லை என்ற கேள்வி சரி தானோ ???

ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் தடியடி நடத்தப்பட்டதே… அனைத்து இடங்களிலும் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனரோ ????

கோவையில் வெறும் 200 நபர்கள் தானே இருந்தார்கள், அவர்களின் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது… அவர்கள் அனைவரும் சமூக விரோதிகளோ?????

சமூக விரோதிகளின் ஊடுருவல் காரணமாக தான் தாக்குதல் நடத்தப்பட்டதெனில்…  70 வயது மூதாட்டி மீதும், 12 வயது சிறுவன் மீதும், பெண்கள் மீதும், தனது  வீட்டுக்குள் இருந்த பெண்களின் மீதும் கொடூரமான தடியடி தாக்குதல் நடத்தப்பட்டதே அதன் காரணம் என்னவோ?????? (இவை அனைத்திற்கும் வீடியோ பதிவுகள் ஆதாரங்களாக  உள்ளது)

இவை அனைத்துக்கும் மேலாக வாகனங்களும், குடிசைகளும் கவல்துறையினராலையே கொளுத்தப்பட்டதே, இதன் காரணம் என்னவோ ??????? (பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

அவசர சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்த அரசு, அந்த வரைவில் குறிப்பிட்டுள்ள விடயங்களை மக்களுக்கு தெளிவாக ஒரு சட்ட வல்லுனரின் துணையோடு எடுத்துரைக்க  தவறியது என்னவோ ????????

இதை செய்திருந்தால் நேற்றே போராட்டம் முற்று பெற்றிருக்குமே?????????

அல்லது இன்று சட்டம் முழு வடிவம் பேரும் வரை (மாலை 5 மணி வரை ) அரசால் பொறுமை காக்கும் படி காவல் துறைக்கு கட்டளை பிரப்பிக்காததின் நோக்கம் என்னவோ??????????

இந்த இரண்டு நாளில் இயற்றப்பட்ட சட்டத்தை கடந்த மூன்று வருடங்களில் இயற்றி இருந்தால் இந்த போராட்டமே துவங்கியிருக்கதே??????????

நம் உணர்வுகளை எடுத்துரைக்கும் ஒருவரை உங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுங்கள்… வென்ற பின் அவர்கள் வரவில்லையென்றாலும் சிறு சிறு போராட்டங்கள் மூலமாக உங்கள் பிரதிநிதிகளுக்கு உங்கள் குறைகளை உணர்த்திக்கொண்டே இருங்கள்….

மேலே நான் குறிப்பிட்ட சமூக விரோத செயல்களுக்கான பதிவுகள்:

 1. https://www.facebook.com/dinakarannews/videos/1356709507700512/
 2. https://youtu.be/uPk6necnBM4
 3. https://www.facebook.com/345373465607407/videos/1016301638514583/
 4. https://www.facebook.com/100007590616155/videos/1807931322803204/
 5. https://www.facebook.com/WhatsappTamilVideo/videos/390984531278482/
 6. https://www.facebook.com/NTSKT1/videos/792587370908241/
 7. https://www.facebook.com/TimesofIndia/videos/10155021448562139/
 8. https://www.facebook.com/vasuki.umanath/videos/10208751441325908/
 9. https://www.facebook.com/100001308543021/videos/1215320401854900/
 10. https://m.facebook.com/story.php?story_fbid=566435983567174&id=169703519907091
 11. https://www.facebook.com/1311790002176085/videos/1315183108503441/
 12. https://www.facebook.com/TamilActressAndActors/videos/1373826849329328/

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s